MANOMYTRA

 

MENTAL HEALTH &   DEADDICTION CENTRE
 
 
TIRUPUR    +91 8220 544 564
gallery/mm

services

    we intend to cater comprehensive and affordable mental health care services to the needy and unreachable in and around tirupur.  we also aim to promote "positive mental health"  and aid in leading stress-free healthy life. we welcome likeminded to participate in this venture and make the people with mental illness live equally and in harmony with others. 

alcohol & other drug deaddiction

acute & emergency psychiatric conditions

suicide prevention

schizophrenia & long term mental illnesses

Depression & anxiety

child & adolescent guidance clinic

elderly mental health

sexual disorders

marital counseling

vocational guidance counseling 

psychotherapies & counseling

 

contact

dr nagarajan s MD

Psychiatrist

Kutty medical, valarmathi, 

old bus stand, tirupur - 1

Tamilnadu, INDIA

phone: +91 8220 544 564

contact@manomytra.com

மனோமித்ரா மனநல மையம்,   திருப்பூர்

தொடர்புக்கு: 8220 544 564

       உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்ககங்கள் போல சீராக இருந்தால் மட்டுமே மனிதன் முழு ஆரோக்கியத்துடன் நல்வாழ்வு வாழ முடியும்.  எனவேதான்  உடல் நலத்திற்கான சிகிச்சைகளுடன் சேர்த்து மன நலத்திற்கான கீழ்காணும் சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது.

மனச்சோர்வு (Depression)

மிகுந்த அசதி, எதிலும் ஆர்வமின்றி வழக்கமான சந்தோஷத்தை இழந்து சோர்வாக, தற்கொலை எண்ணங்களுடன் இருந்தால் மனச் சோர்வு இருக்கலாம்.  இதற்கு மனச் சோர்வு நீக்கி மருந்துகள் மற்றும் மனவழி கவுன்சிலிங் (counselling) சிகிச்சை,  சீர்சிந்தனை சிகிச்சை  அளிக்கப் படுகிறது.

மனப் பதற்றம் (Anxiety)

எப்போதும் எதைப் பற்றியாவது பயந்து கொண்டும், படபடப்பு, நடுக்கம், அதிக வியர்வை, மற்றும் தான் இறந்து விடுவோம் என்ற எதிர்மறை எண்ணத்துடன் இருந்தால் மனப்பதற்ற நோயாக இருக்கலாம்.  மருந்துகளுடன் ஆற்றுப் படுத்துதல், மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும்  மனவழி சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம்.

மனச்சிதைவு (Schizophrenia)

தானாகப் பேசி சிரித்தல், சந்தேக குணம், தனிமையை நாடுதல், காதுகளில் குரல் ஒலித்தல் மற்றும் எதிர்காலச் சிந்தனையின்றி இருத்தல் போன்றவை மனச்சிதைவின் அறிகுறிகளாகும்.  தக்க மருந்துகள், மனவழி சிகிச்சைகள் மற்றும் புணர்வாழ்வு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கும் பொழுது இவ்வியாதியிலிருந்து விடுபடலாம்.

மன எழுச்சி - தளர்ச்சி நோய் (Bipolar Disorder)

மேற்சொன்ன மனச்சோர்வு (தளர்ச்சி) தொந்தரவுடன் மன எழுச்சி (அதிக உற்சாகம், பேச்சு, கோபம், தூக்கமின்மை, ஆடம்பரச் செலவு, தன்னை உயர்வாக நினைப்பது)  தொந்தரவு மாறி மாறி ஏற்படுதல்.  மருந்து மாத்திரைகள் மட்டுமன்றி வேகம் குறையும் வரை உள்நோயாளி சிகிச்சையும், அந்த துயரம் மற்றும் எழுச்சியைப் புரிந்து கொண்டு வாழும் மனவழி சிகிச்சையும் இதற்கு அளிக்கப் படுகிறது.

எண்ணச்சுழல் நிர்பந்த நோய் (Obsessive Compulsive Disorder)

ஒரே விதமான எண்ணம் சுழல் போல மனதில் திரும்பத் திரும்ப வருதல், கட்டுப் படுத்தினால் பதற்றமும் பதற்றத்தைப் போக்க செயல் நிர்பந்தமும் (உதா., அடிக்கடி கை கழுவுதல்) உண்டாகும்.  இதற்கு மருந்து மாத்திரைகள் மட்டுமன்றி, திசைமாற்ற சிகிச்சை, உள்ளார்ந்து எதிர்கொள்ளுதல் மற்றும் மனவழி சீர் சிந்தனை சிகிச்சை போன்றவை இங்கு அளிக்கப்படும் பயனுள்ள சிகிச்சைகளாகும்.

போதை மாற்று சிகிச்சைகள் (Deaddiction Treatment)

ஆல்கஹால் என்னும் மது, புகையிலை, கஞ்சா மற்றும் இன்னபிற போதை பழக்கத்திற்கும், தூக்க மாத்திரை, வலி மாத்திரைகளுக்கு அடிமையானவர்களுக்கும் போதை மாற்று சிகிச்சையும், தொடர் கவுன்சிலிங் மற்றும் குழு முறை சிகிச்சையும் அளிக்கப் படுகிறது.

மன அழுத்த மேலாண்மை & தற்கொலை தடுப்பு சிகிச்சைகள்:

மாறிவரும் அதிவேக வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் நெருக்கடிகளால் ஏற்படும் மன அழுத்தம், கோபம், மற்றும் தற்கொலை எண்ணங்களைத் தடுக்க மனவழி கவுன்சிலிங், மன அழுத்த மேலாண்மை, நேர்மறை சிந்தனை வளர்த்தல், மற்றும் யோகா வழி சிகிச்சைகளும் அளிக்கப் படுகிறது.

பாலியல் தொந்தரவுகள் (Sexology)

ஆண்களுக்கு ஏற்படும் விருப்பமின்மை, பயம், விந்து முந்துதல் மற்றும் எழுச்சியின்மை, பெண்களுக்கு ஏற்படும் உறவைப் பற்றிய பயம், விருப்பமின்மை மற்றும் யோனி இறுக்கம் முதலிய பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன.

குழந்தைகள் மனநலம் மற்றும் வழிகாட்டுதல்

குழந்தைகள் மற்றும் வளர்இளம்பருவ காலத்தில் உண்டாகும் பள்ளி செல்ல மறுத்தல், படிப்பில் பின்னடைவு, துறுதுறுவென கவனக்குறைவுடன் (ADHD) இருத்தல், முகம் பார்த்து பேசாமை (Autism), மூளைவளர்ச்சி குறைபாடு மற்றும் கற்றல் குறைபாடுகளுக்கும் (Dyslexia) வழிகாட்டுதல் சிகிச்சை வழங்கப் படுகிறது.

முதியவர்கள் மன நலம்

வயது முதிந்தோர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை, ஞாபக மறதி, உடலில் நோய் இருப்பதாக முறையிடும் உடலாக்கம், மூளைச் சுருக்கம் மற்றும் பிற பொதுவான மன நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குழுமுறை மற்றும் புணர்வாழ்வு (Rehabilitation)  சிகிச்சைகள்

மனச்சோர்வு & மனப் பதற்ற பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும், குழுவாக மனவழி கவுன்சிலிங் சிகிச்சையும், யோகா வழி சிகிச்சையும் வழங்கப் படுகிறது.  மேலும் நீண்ட நாள் மன நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் தன்னைப் பற்றிய அக்கறையும் இழந்து தவிப்பவர்களுக்காக அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப புணர்வாழ்வு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

யோகா வழி மூச்சுப்பயிற்சி, ஆற்றுப் படுத்துதல் மற்றும் மனத்தளர்வு சிகிச்சைகளும் வழங்கப் படுகிறது.

மின் அதிர்வு சிகிச்சை (ECT)

மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப் படாத தீவிர மன அழுத்த மனச்சிதைவு தொந்தரவுகளுக்கு தீவிர தற்கொளை முயற்சியிலிருந்து காப்பதற்கும் மின் அதிர்வு சிகிச்சையும் குறைந்த கட்டணத்தில் வழங்கப் படுகிறது.

மன நலப் பிரச்சனைகளை அறியாமையாலும், அலட்சியத்தாலும் அசிங்கம் என்றும் கருதி தள்ளிப் போடாமல் விரைவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.  மேலும் ஒவ்வொருவரும் தன் வீடு, பணியிடங்களில் உள்ள மன நலப் பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்களை அரவணைத்து சிகிச்சை பெற வலியுறுத்த வேண்டும்.  தேவைப் படுபவர்களுக்கு மேற்சொன்ன தகவல்களைப் பறிமாறி சிகிச்சைக்கு வழிகாட்டினால் சமுதாயம் மேம்படும்.

 

           மன நலம் காப்போம்...! 

        மனித வளம் காப்போம்...!!

 

gallery/psychiatry-snagarajanmdpsychiatry-tiruppur-b6244a
Free Web Hosting